\
சபரிமலை தங்க கொடிமரத்தில் பாதரசம் வீச்சு: 5 பேரிடம் விசாரணை

சபரிமலை தங்க கொடிமரத்தில் பாதரசம் வீச்சு: 5 பேரிடம் விசாரணை

சபரிமலை தங்க கொடிமரத்தில் பாதரசம் வீச்சு: 5 பேரிடம் விசாரணை
Published on: 

சபரிமலை அய்யப்பன் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க கொடிமரம் பாதரசம் ஊற்றி சேதப்படுத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இருந்த பழமையான செப்பு கொடிமரம் சேதமடைந்ததை அடுத்து, தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. காலையில் கொடிமரம் நிறுவப்பட்ட நிலையில், பிற்பகலிலேயே தங்க தகடுகள் மீது பாதரசம் ஊற்றி ‌சேதப்பட்டது தெரிய வந்தது. சபரிமலை நிர்வாகம், அளித்த புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு 5 பேரை பிடித்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com