பத்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக, சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புது டெல்லி அருகேயுள்ள ஜெய்த்பூர் அருகே குடிசை ஒன்றில் வசித்து வருபவர் டோங்கி பாபா. இவர் தன்னை சாமியார்
என்று அழைத்துக்கொண்டு, பூஜைகள் செய்து வந்தார். அவரை நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது குடிசைக்கு
சென்று பூஜைகளில் பங்கேற்று வந்தனர். அங்கு செல்லும் ஒரு பெண், தனது பத்து வயது மகளையும் அடிக்கடி
அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று டோங்கி பாபா, கடந்த
நான்கைந்து மாதங்களாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளான். ’இதை வெளியே சொல்லக் கூடாது,
சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று அந்த பாபா மிரட்டியுள்ளான்.
அந்த சிறுமி தனது அம்மாவிடம் இந்தச் சம்பவத்தைத் தெரிவித்தது. இதையடுத்து பதறிய அந்த அம்மா, போலீசில்
புகார் செய்தார். போலீசார் அந்த சாமியாரை கைது செய்துள்ளனர்.