‘லட்சுமி’ படத்தை அச்சிட்டால் ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் : சுப்ரமணியன் சுவாமி

‘லட்சுமி’ படத்தை அச்சிட்டால் ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் : சுப்ரமணியன் சுவாமி

‘லட்சுமி’ படத்தை அச்சிட்டால் ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் : சுப்ரமணியன் சுவாமி
Published on

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி கடவுளின் படத்தை அச்சிட்டால் அதன் மதிப்பு உயரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்ரமணியன் சுவாமி, விவேகானந்தர் குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரூபாய் நோட்டுகளில் லட்சுமி கடவுளின் படத்தினை அச்சிட வேண்டும். அப்படி அச்சிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்” என்று கூறினார். இந்தோனேஷியா நாட்டின் பண மதிப்பு நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து பதில் அளிக்கட்டும். நான் இதனை ஆதரிக்கிறேன். விநாயகக் கடவுள் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி கடவுளின் படம் இருந்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும். இதுகுறித்து யாரும் மோசமாக உணரக் கூடாது” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்திய பொருளாதாரம் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்கிறது என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கடந்த 42 ஆண்டுகளில் பொருளாதாரம் இதுபோன்று மோசமாக இருந்ததில்லை. இந்த பொருளாதார மந்தம் உண்மையானது. 2019-20 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கணித்திருந்தார். ஆனால், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்ற அளவிலே உள்ளது” என்று கூறினார் சுப்ரமணியன் சுவாமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com