பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ’ஃபேஸ்புக்’ சாமியாரை தேடுது போலீஸ்!

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ’ஃபேஸ்புக்’ சாமியாரை தேடுது போலீஸ்!

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ’ஃபேஸ்புக்’ சாமியாரை தேடுது போலீஸ்!
Published on

பெண்ணை மிரட்டி இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை புரிந்த ஃபேஸ்புக் சாமியாரை போலீசார் தேடிவருகின்றனர். 

தானே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 39. தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது தந்தைக்கு புற்றுநோய்.
சுதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் சாய்லால் ஹிராலால் (50) என்பவர் அறிமுகமானார். தன்னை சாமியார் கூறிக்கொண்ட சாய்லால், ’கேன்சரெல்லாம் எனக்கு மேட்டரே இல்லை, சீக்கிரமே குணப்படுத்திடலாம்’ என்று கூறியிருக்கிறார்.

இதை நம்பி, சுதா அவருடன் பழகினார். பிறகு சுதாவை நேரில் சந்தித்த லால், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்தார். தனக்கு
உடன்படவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கடந்த 2 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த பாலியல் டார்ச்சரை தாங்க முடியாத சுதா, வீடியோ பயத்தால் வெளியே சொல்லவும் இல்லை. அதே நேரம், சுதாவை மிரட்டி, 3.10 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கியிருக்கிறார் சாமியார். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தானே போலீசில் புகார் செய்தார் சுதா. அவரின் மொத்த கதையையும் கேட்ட போலீசார் சாமியாரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com