கோவா சட்டசபை தேர்தல் : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

கோவா சட்டசபை தேர்தல் : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
கோவா சட்டசபை தேர்தல் : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

கோவா சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் அடுத்த மாதம் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்தத் தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் களம் காணத் தயாராகி வருகின்றன.

ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து, கோவா மாநிலத்திலும் தேர்தலில் களம் காண ஆம் ஆத்மி முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில், கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞரும், சமூக சேவகருமான அமித் பலேகர் களமிறக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து அவரை அறிமுகம் செய்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற மாநிலமாக கோவா திகழும் என்று முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமித் பலேகர் உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com