பாரிக்கரின் உடல்நலக் குறைவும்; அவர் எடுத்து வந்த சிகிச்சைகளும் என்ன?

பாரிக்கரின் உடல்நலக் குறைவும்; அவர் எடுத்து வந்த சிகிச்சைகளும் என்ன?
பாரிக்கரின் உடல்நலக் குறைவும்; அவர் எடுத்து வந்த சிகிச்சைகளும் என்ன?

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கணையப் புற்று நோயால் சில மாதங்களாக அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவு குறித்து கடந்த காலங்களில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தெரிந்துகொள்வோம்.

  • 2018 பிப்ரவரி மாதம் 15ம் தேதி  மனோகர் பாரிக்கர் கணையப் பகுதியில் ஏற்பட்ட அழற்சிக் காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • பின்னர் இதேமாதம் 22ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அத்துடன் அன்றே கோவா மாநில பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்தார்.
  •  பிப்ரவரி 27ஆம் தேதி உடலில் ஏற்பட்ட வறட்சியால் கோவா அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மார்ச் 1ஆம் தேதி வீடு திரும்பினார்.
  •  மார்ச் 6ஆம் தேதி மும்பை லீலாவதி மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின்படி அமெரிக்காவிற்கு சிகிச்சைகாக சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 15ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக அலுவல்களை மேற்கொண்டார். அத்துடன் பல அரசு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
  • கடந்த 2018 செப்டம்பர் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அப்போது அவருக்கு மற்றொரு அறுவை சிக்கிச்சை செய்யபட்டது. இதனையடுத்து அவர் கோவாவிலுள்ள அவரது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்துவந்தார். 
  •  டிசம்பர் 16ஆம் தேதி மாண்டோவி நதி அருகே கட்டப்பட்டிருக்கும் பாலப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது மனோகர் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. உடலும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். ஒருவரின் துணையுடனே அவர் குறிப்பிட்ட தூரம் நடந்தார்.
  • 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி மீண்டும் சிகிச்சைகாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை முடிந்து பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் கோவா திரும்பினார்.
  • பிப்ரவரி 24ஆம் தேதி குடல் இரைப்பை எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பிப்ரவரி 26ஆம் தேதி வீடு திரும்பி மருத்துவர்களின் கண்கானிப்பில் இருந்துவந்தார்.

இந்தச் சூழலில்தான் நேற்று காலை பாரிக்கரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இரவு 8 மணியளவில் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com