“நிதியைக் கொடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்” - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

மேற்கு வங்காளத்திற்கு தர வேண்டிய நிதியை உடனே வழங்குங்கள் இயலாவிட்டால் பதவி விலகுங்கள் என மத்திய அரசை மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் அலிப்பூர் துவார் என்ற பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேற்கு வங்காளத்தில் வீட்டு வசதி, கிராமப்புற வேலைவாய்ப்பு போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவற்றை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் மம்தா கூறியுள்ளார்.

மேலும் ஜிஎஸ்டி வரியில் தங்களுக்கான பங்கும் முழுமையாக தரப்படவில்லை என்றும் மம்தா விமர்சித்தார். இவற்றை விடுவிக்க இயலாவிட்டால் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் மம்தா காட்டமாக கூறினார்.

இது தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு நேரம் ஒதுக்கப்படும் என நம்புவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com