சொந்த குடும்ப உறுப்பினர்களால் 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை! புனே சிறுமி பகீர் தகவல்

சொந்த குடும்ப உறுப்பினர்களால் 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை! புனே சிறுமி பகீர் தகவல்
சொந்த குடும்ப உறுப்பினர்களால் 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை! புனே சிறுமி பகீர் தகவல்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. “குட் டச்., பேட் டச்” வகுப்பை கவனித்த பிறகு தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் அந்த சிறுமி.

தற்போது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வருகிறார் அந்த 11 வயதே ஆன சிறுமி. 2017 ஆம் ஆண்டு பீகாரில் வசிக்கும் போது தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கியுள்ளார். பல வருடங்களாக தந்தை இந்தச் செயலை செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. சிறுமியின் மூத்த சகோதரர் நவம்பர் 2020 இல் அவளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். அவளது தாத்தாவும் தூரத்து மாமாவும் அவளை தகாத முறையில் தொடுவது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு தனக்கு நிகழ்வது என்னவென்று தெரியாததால் இதுகுறித்து யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறுமி தனது பள்ளியில் “நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, bad touch)” வகுப்பை முழுமையாக கவனித்தபோது தான், தனக்கு தந்து குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என்னவென்று புரியவந்துள்ளது. உடனடியாக தனது பள்ளி நிர்வாகிகளிடம் நிகழ்ந்ததை கூறியபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியின் சகோதரர் மற்றும் தந்தை மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376ன் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தாத்தா மற்றும் தொலைதூர மாமா மீது பிரிவு 354 (சீர்குலைக்கும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சம்பவங்களும் தனித்தனியாக நடந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் செய்த செயல்களை அறிந்திருக்க மாட்டார்கள், இது கூட்டு பலாத்கார வழக்கு அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com