இந்தியா
மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி ! துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மும்பை ரயில்வே போலீஸ்
மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி ! துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மும்பை ரயில்வே போலீஸ்
மும்பை மாநரில் ஓடும் ரயிலில் தவறி விழுந்த சிறுமியை ரயில்வே போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.
மும்பையின் பைகுல்லா ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் வேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் 12 வயது சிறுமி ஒருவர் பயணித்து வந்துள்ளார். அப்போது ஓடும் ரயிலிருந்த சிறுமி திடீரென தவறி நடைமேடையில் விழுந்தார். தண்டவாளத்துக்குள் விழவிருந்த சிறுமியை ரயில்வே போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.
இந்த சம்பவம் நவம்பர் 26 ஆம் தேதி நடந்ததுள்ளது. இதனை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இப்போது அந்தக் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாவது மட்டுமல்லாமல், சிறுமியை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்க்கு பாராட்டும் குவிந்து வருகிறது.