“என் குழந்தையின் இதயத்தை மோடி கவர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம்

“என் குழந்தையின் இதயத்தை மோடி கவர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம்

“என் குழந்தையின் இதயத்தை மோடி கவர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம்
Published on

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் கேக் வெட்டிய சிறுமிக்கு ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

மகேஷ் விக்ரம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, தனது மகளின் பிறந்தநாள் கேக் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ''இன்று எனது மகள் பெலாகின் பிறந்தநாள். பரிசாக உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவளது பிறந்தநாள் கேக்கில் மோடிஜியின் புகைப்படம் வேண்டுமென்று கேட்டாள். உண்மையிலேயே மோடி ஒரு திருடர்தான்... அந்தத் திருடர் குழந்தைகளின் இதயங்களைக்கூட கவர்ந்து விடுகிறார்'' என்று பதிவிட்டிருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவு மோடியின் கவனத்துக்கு செல்ல, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ''இளம் பெலாகுக்கு என் வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள். பெலாகு மகிழ்ச்சியும், ஆரோக்யமும் பெற்று வாழ நான் வாழ்த்துகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

ரஃபேல் விமானம்  தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com