ஜிம்மில் முதல் நாள் வார்ம்-அப் பயிற்சியில் ஈடுபட்ட 29-வயது வீராங்கனை மாரடைப்பால் உயிரிழந்தார்.
மும்பையை சேர்ந்தவர் ஜெனிடா. வயது 29. இவர் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றிற்கு முதல் முறையாக உடற்பயிற்சிக்கு சென்றிருக்கிறார். உடற்பயற்சி சென்றுகொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "ஜெனிடா முதலில் சில எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாரதவிதமாக மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் ஜெனிடாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்" என போலீசார் கூறினர்.
ஜெனிடா, ஷார்ட்-புட்டில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். இத்தோடு ஈட்டி எறிதலில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். தற்போது அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது மரணமடைந்து பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

