கட்டாயப்படுத்தி பெண்ணின் ஆடையை கழற்றி கொடூரம்: இளைஞர்கள் அதிரடி கைது

கட்டாயப்படுத்தி பெண்ணின் ஆடையை கழற்றி கொடூரம்: இளைஞர்கள் அதிரடி கைது

கட்டாயப்படுத்தி பெண்ணின் ஆடையை கழற்றி கொடூரம்: இளைஞர்கள் அதிரடி கைது
Published on

பீகாரில் பலவந்தமாக பெண்ணின் ஆடையை கழற்றி கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் ஜெனாபாத் அருகே பெண் ஒருவரை இளைஞர்கள் சிலர் கட்டாயப்படுத்தி ஆடையை கழற்றிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உதவிக்கு யாராவது வாருங்கள் என அப்பெண் கெஞ்சிய போதும் யாரும் அப்பெணுக்கு உதவ முன்வரவில்லை. பெண்ணின் ஆடையை கழற்றிய அவர்கள் அதன்பின் நக்கலடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நிலையில் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புயை நபர்களை பிடிக்க போலீசார் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இன்னும் இரண்டு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com