\
Gig Workers in India Face Long Hours and Poor Working Conditions
Food DeliveryChat Gpt

முழுநேர வேலையாக மாறும் கிக் பணிகள்.. வெளியான ஆய்வறிக்கை!!

ஓய்வறை, குடிநீர், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டச் சீர்திருத்தம் அவசியம் என ஆய்வு வலியுறுத்துகிறது.
Published on

இந்தியாவில் ஸொமாட்டோ, ஸ்விகி, ஓலா, உபெர், இ-காமர்ஸ் டெலிவரி உள்ளிட்ட கிக் பணி என்பது, பலருக்கு நீண்டகால முழுநேர வேலையாக மாறியுள்ளதாக 'ஜன்பஹால்' அமைப்பின் தேசிய ஆய்வு தெரிவிக்கிறது. 72 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஓராண்டுக்கு மேலாக இத்துறையில் தொடரும் நிலையில், 57 சதவீத கிக் தொழிலாளர்கள் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கின்றனர். 74 சதவீதப் பணியாளர்களுக்கு ஓய்வறை வசதி இல்லாமலும், 53 சதவீதத்தினர் சொந்தப் பணத்தில் குடிநீர் வாங்கும் சூழலிலும் பணியாற்றுகின்றனர்.

Gig Workers
Gig WorkersChat Gpt

தூக்கமின்மை, உடல் வலி மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் இவர்களுக்கு நிறுவனங்களிடமிருந்து எவ்வித மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை என அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இத்தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பணிச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் உடனடியாக சட்டச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென அந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

Gig Workers in India Face Long Hours and Poor Working Conditions
36,000 அடியில் பெரும் பரபரப்பு.. ஏர் இந்தியா பயணிகள் ஷாக்.. முக்கிய தொழில்நுட்பம் செயலிழப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com