‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்

‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்
‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று விலகிக்கொள்வதாக கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். 

இது தொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதியுள்ள கடிதத்தில், `கட்சியில் சோனியா காந்தி வெறும் பெயரளவுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவராக செயல்படுகிறார். கட்சியின் அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்தியை சார்ந்தோர் எடுப்பது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், `காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை சோதனை முயற்சிகளும் படுதோல்வியைச் சந்தித்து விட்டன. இதிலிருந்து மீள முடியாத நிலைக்கு கட்சியை தள்ளப்பட்டுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.விடமும், மாநில அளவில் மாநில கட்சிகளிடமும் காங்கிரஸ் தனது இருப்பிடத்தை இழந்து வருகிறது. இதற்கு எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் தலைமையே காரணம். காங்கிரஸ் கட்சியிலும் ரிமோட் கண்ட்ரோல் முறை வந்துவிட்டது.

பொறுப்புணர்வற்ற தலைமையால் காங்கிரஸ் கட்சி இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் என்பது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான விஷயம். கட்சியில் பூத் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவருமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையால் தான் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களை தொண்டர்கள் தேர்வு செய்வது இல்லை. அந்தவகையில் கட்சிக்குள் நடக்கும் மிகப்பெரும் மோசடிக்கு காங்கிரஸ் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் மோசமான நிலைமைக்கு வருவதற்காக, முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? இதனை இன்றைய காங்கிரஸ் தலைமை எண்ணிப்பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும், `ராகுல் காந்தி அரசியலுக்கு நுழைந்த பிறகு கட்சியில் நிலவிய கலந்தாலோசனை வழிமுறையை முற்றிலுமாக அழித்துவிட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே முக்கிய காரணம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்படும் குலாம் நபி ஆசாத் மத்திய அமைச்சர், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றம் குறித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்கள் குழுவில் குலாம் நபி ஆசாத்தும் இடம்பெற்றிருந்தார். ராஜ்யசபாவில் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர் குலாம் நபி ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட தேசிய செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் மாலை 3:30 மணி அளவில் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ள நிலையில் அந்தக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் விலகல் மற்றும் குற்றச்சாட்டு உள்ளிட்டவர்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அட்டவணை இறுதிச்செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com