பேய் சொல்லுச்சாம்: மகளின் காதை வெட்டிய அப்பா!

பேய் சொல்லுச்சாம்: மகளின் காதை வெட்டிய அப்பா!

பேய் சொல்லுச்சாம்: மகளின் காதை வெட்டிய அப்பா!
Published on

பேய் ஆணையிட்டதாக கூறி தந்தையே மகளின் காதுகளை வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியின் ஜிடிபி நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் பஹதூர். இவருக்கு 2 பெண்கள் குழந்தைகள். அதில், ஒரு குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதால் குடிப்பழகத்திற்கு ஆளாகிய அம்ரித், சற்று மனநலம் சரியில்லாதவர் போல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர், தனது 3 வயது பெண் குழந்தையின் காதை வெட்டியுள்ளார். 
இதுதொடர்பாக அம்ரித்தை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பேய் ஒன்று தன்னிடம் கூறியதால், குழந்தையின் காதை வெட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதனை தான் செய்யாவிட்டால் குழந்தை இறந்துவிடும் என பேய் சொன்னதாகவும், இதன் காரணமாகவே இந்த கொடூரச் செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com