\
”எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; வரும் காலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் மோசமாகும்” - மத்திய அரசு

”எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; வரும் காலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் மோசமாகும்” - மத்திய அரசு

”எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; வரும் காலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் மோசமாகும்” - மத்திய அரசு
Published on

கொரோனாவின் கோரத்தாண்டவம் வரும் வாரங்களில் மிக மோசமாக இருக்கும் என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தனியார் நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது மத்திய அரசு கூறியதாவது, “ அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அடுத்த சில வாரங்களுக்கு கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மிக மோசமானதாக இருக்கும். இதனை நாங்கள் மக்களை அச்சப்படுத்துவதற்காகச் சொல்ல வில்லை. ஆனால் உண்மை நிலவரம் இப்படிதான் இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக டெல்லி அரசு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்யா விடில் நிலைமை சீரழிந்து விடும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com