உ.பி.யில் ஜெர்மன் சுற்றுலா பயணியை தாக்கியவர் கைது!

உ.பி.யில் ஜெர்மன் சுற்றுலா பயணியை தாக்கியவர் கைது!

உ.பி.யில் ஜெர்மன் சுற்றுலா பயணியை தாக்கியவர் கைது!
Published on

ஜெர்மன் சுற்றுலா பயணியை தாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஹோல்கர் எரிக் மிஸ்ச். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.  சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கு பீகாரைச் சேர்ந்த அமன்குமார் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் வழி கேட்டார் ஜெர்மன் சுற்றுலா பயணி. அவரிடம், ’உங்களை வரவேற்கிறேன்’ என்றாரம் அமன் குமார். ஆனால் ஜெர்மன்காரர் பதிலுக்கு வணக்கம் சொல்ல வில்லையாம். இதையடுத்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் அமன்குமார். ஜெர்மன் சுற்றுலாப் பயணி கொடுத்த புகாரை அடுத்து, அமன்குமார் கைது செய்யப்பட்டார். 

அமன்குமார் கூறும்போது,  ’என் மீது தவறு ஏதும் இல்லை. இந்தியாவுக்கு வந்ததற்கு நன்றி என்று சொன்னேன். அவர் என்னைத் தள்ளி குத்தினார். துப்பவும் செய்தார்’ என்று கூறியுள்ளார். 
உத்தரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தாக்கப்படுவது தற்போது அதிகரித்துவருகிறது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஆக்ரா அருகே தாக்கப்பட்டார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com