\
நடுக்கடலில் பயணிக்கு மாரடைப்பு:  ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

நடுக்கடலில் பயணிக்கு மாரடைப்பு: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

நடுக்கடலில் பயணிக்கு மாரடைப்பு: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
Published on

மும்பையில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு கப்பலில் பயணித்தவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டனர்.

மும்பையில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு கப்பலில் பயணித்த 75 வயது ஜெர்மானிய பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு, கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு செல்லும் அந்த சொகுசு கப்பலில் மொத்தம் 1,855 பயணிகள் இருந்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com