முப்படைத் தலைமைத் தளபதி எப்படி செயல்படுவார் ?

முப்படைத் தலைமைத் தளபதி எப்படி செயல்படுவார் ?
முப்படைத் தலைமைத் தளபதி எப்படி செயல்படுவார் ?

நாட்டின் பாதுகாப்புத் துறை தங்களுடைய உத்தரவை பாதுகாப்புத் துறை செயலாளர் மூலமாகத்தான் ராணுவ தளபதி, கப்பல்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகிய முப்படைகளையும் இயக்குவார்கள். தற்போது உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தலைமைத் தளபதி பொறுப்பின் மூலம் இந்த பிளவுபட்ட நடைமுறைகள் ஒன்றிணைக்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது. பாதுகாப்புத் துறை செயலாளருக்கு இணையான முப்படைத் தலைமைத் தளபதி முக்கிய விவகாரங்களை நேரடியாக பாதுகாப்புத் துறையிடமே கலந்தாலோசிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைத் தலைமைத் தளபதி ராணுவ தளபதி, கப்பல்படைத் தளபதி, விமானப் படை தளபதிகளைப் போன்றே 4 ஸ்டார்களைக் கொண்டவராக இருப்பார். ஊதியமும் மற்ற தளபதிகளுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். முப்படைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் முப்படைத் தளபதி ஈடுபடுவார். ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும் முப்படைத் தலைமைத் தளபதி செயல்படுவார். அவர் எவ்வளவு ஆண்டுகள் அப்பதவியில் நிடிப்பார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com