பொறியியல் கல்லூரிகளுக்கும் நாடுதழுவிய பொதுநுழைவுத் தேர்வு?... மத்திய அரசு திட்டம்
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு இருப்பது போல நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு பொதுவான நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக விரைவில் கூடவுள்ள தேசிய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஈடுபாடு காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நுழைவுத் தேர்வானது நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை தற்போது ஐஐடியில் எனப்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மட்டுமே ஜெஇஇ (JEE) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.