\
Gen Z Shakes Politics Why BJP Chose Yuva
BJPANI

Gen Z-யால் ஆட்டம் கண்ட அரசியல்.. பாஜக எடுத்த புதிய உத்தி.. ‘யுவா’வின் பின்னணி என்ன?

இந்தியாவிலும், Gen Z தலைமுறையின் சுமார் 37 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Published on

கரப்பான் ஜனதா கட்சியின் ஆதரவுடன் 'ஜென் Z'தலைமுறையினர் நடத்திய போராட்டம், பாஜகவையும் உலுக்கியது. இதன் அதிர்ச்சியால், பாஜக தற்போது 'ஜென் Z’-யை ஒதுக்கி, 'யுவா' என்கிற பாதையை வகுக்கத் திட்டமிட்டுள்ளது. பாஜக ஏன் ‘யுவா’வைத் தேர்ந்தெடுத்தது? வாருங்கள், அறிவோம் இந்தக் கட்டுரையில்!

இன்று உலக அரசியலையே மாற்றக்கூடிய ஒரு தலைமுறையாக 'ஜென் Z' (Generation Z) உள்ளது. இது, 1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறையைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது. மில்லினியல்களுக்குப் (Millennials) பிறகு வந்த இந்த தலைமுறையினர், பிறந்தது முதல் இணையம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் தீவிர வளர்ச்சியோடு ஊறிப் போனவர்களாக உள்ளனர். மேலும், இவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். உலகின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (சுமார் 25-30%) இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தியாவிலும், இந்த தலைமுறையின் சுமார் 37 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜென் Z தலைமுறையினர் தங்களது தனித்துவமான சிந்தனைகளாலும், தொழிலநுட்ப அறிவாலும் உலகளவில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவே தகவல்களை அறிந்துகொள்கின்றனர். குறிப்பாக, பிராண்ட் விளம்பரங்களைவிட, உண்மையான பயனர்களின் விமர்சனங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் கருத்துகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். அதன்மூலமாக, காலநிலை மாற்றம், பாலின சமத்துவம், மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விஷயங்களில் துணிச்சலாகக் குரல் கொடுக்கின்றனர். அதற்காக வீதிகளில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி காண்கின்றனர்.

Gen Z Shakes Politics Why BJP Chose Yuva
கரப்பான் பூச்சி கட்சியினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை.. 3 நிபந்தனைகளை முன்வைத்த CJP?

இவர்களுடைய போராட்டங்களால் இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அரசியல் மாற்றமே நிகழ்ந்தது. ஏன், இந்தியாவில்கூட சமீபத்தில் கரப்பான் ஜனதா கட்சியுடன் ஆதரவுடன் 'ஜென் Z’நடத்திய போராட்டம் ஓர் அமைச்சரை நீக்குவதற்கு வழிவகுத்தது. இது, இந்தியாவில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், இளைஞர்களைச் சென்றடையும் முயற்சியில், பாஜக 'ஜென் Z' (Gen Z) என்ற சொல்லைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக பரந்த 'யுவா' (Yuva) என்ற சொல்லைத் தேர்வு செய்யத் தீர்மானித்துள்ளது. இந்தியாவின் இளைஞர்கள் அனைவரும் ஒரே சிந்தனை அல்லது கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள் அல்ல. தவிர, 'ஜென் Z' என்ற சொல் மேலைநாட்டிலிருந்து உருவான ஒன்று. ஆகையால், அது இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களையும் கவராது என பாஜக நம்புகிறது. அதனால்தான் பாஜக, 'யுவா' (இளைஞர்) என்ற சொல்லைப் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளது. மேலும், இச்சொல் நாடு மற்றும் பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றைக் கடந்து அனைத்து இளைஞர்களையும் உள்ளடக்கும் பொதுவானதாக இருக்கிறது. இதையடுத்தே, இனி வருங்காலங்களில் 'யுவா' என்ற சொல்லைப் பயன்படுத்த பாஜக தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Gen Z Shakes Politics Why BJP Chose Yuva
அறை விழுந்தது ஏன்? ஜெய்ப்பூர் சம்பவம் குறித்து கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com