முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி : அதிக சொத்துகளை குவித்த இந்திய செல்வந்தர்

முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி : அதிக சொத்துகளை குவித்த இந்திய செல்வந்தர்
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி : அதிக சொத்துகளை குவித்த இந்திய செல்வந்தர்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த மண்ணான குஜராத்தை சேர்ந்தவர் அதானி குழும தலைவர் கவுதம் அதானி. 30.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர். வைர வியாபாரியாக தனது தொழிலை தொடங்கிய அவர் பிவிசி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, கட்டுமானம் என பல துறைகளில் தடம் பதித்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி கொண்ட சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, மின் விநியோகம் மாதிரியான தொழிலின் ஊடாக தனது வருவாயை அதிகரித்து இன்று இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.


இந்நிலையில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 19.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை அவரது மொத்த சொத்து மதிப்பில் கூடியுள்ளது. இது ஆசியாவின் முதல்நிலை செல்வநாதரான முகேஷ் அம்பானி சேர்த்த சொத்துகளை காட்டிலும் அதிகம். அம்பானி நடப்பு ஆண்டில் 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே அவரது சொத்து மத்திப்பில் சேர்த்துள்ளார்.


நாள் ஒன்றுக்கு 449 கோடி வீதம் கடந்த பத்து மாதங்களாக அதானியின் சொத்து மதிப்பு கூடி வந்துள்ளது. இதனால் தற்போது அதிக சொத்துகளை குவித்து வருபவர்களின் பட்டியலில் உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அதோடு உலக அளவில் பணம் படைத்த செல்வந்தர்களின் 40வது இடத்தில் உள்ளார் அதானி.


அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி கேஸ் மற்றும் அதான் டிரான்ஸ்மிஷனின் பங்குகளின் விலை கூடியதால் இதை சாத்தியமாக்கி உள்ளார் என நிதுத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com