கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம்

கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம்

கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம்
Published on

மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெற்காசிய, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் South Asia Media Defenders Network எனப்படும் தெற்காசிய ஊடக பாதுகாப்பு குழுமம், உலகில் கருத்துச் சுதந்திரத்திற்கான இடம் சுருங்கி வருவதை கவுரியின் படுகொலை உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் பெங்களூருவில் இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. ஆகவே, கவுரி லஙகேஷ் கொலை தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com