இந்தியா
கூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்கங்கள் : பயணிகள் அச்சம்
கூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்கங்கள் : பயணிகள் அச்சம்
குஜராத்தில் இரவு நேரத்தில் கூட்டமாக சிங்கங்கள் சாலையில் உலா வந்ததால் வாகனத்தில் சென்றவர்கள் அச்சமடைந்தனர்.
குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய கிர் காடுக்கு மிக அருகில் ஜுனாகத் நகரம் உள்ளது. இதன் புறநகர் சாலையில், கொட்டும் மழையில் நள்ளிரவு நேரத்தில் நான்கைந்து சிங்கங்கள் உலா வந்துள்ளன. தொடர்மழையால், காட்டை விட்டு சிங்கங்கள் கூட்டமாக வெளியேறி இரைத்தேடுவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள வனத்துறையினர், இரவு நேரங்களில் சிங்கங்கள் காட்டைவிட்டு வெளியேறி, அதிகாலையில் திரும்பிவிடும் என தெரிவித்துள்ளனர். மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.