\
5 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி..!

5 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி..!

5 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி..!
Published on: 
ஹரியானாவில் 5 மெர்சிடிஸ் கார்களுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரியை சினிமா பாணியில் போலீஸ் விரட்டி பிடித்தது.
 
ஹரியானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று, 5 புதிய மெர்சிடிஸ் கார்களை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு கண்டெய்னர் லாரியை, கொள்ளைக் கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் மறித்துள்ளனர்.
 
லாரி ஓட்டுநரை கயிறால் கட்டிப்போட்டு கார்களுடன் கண்டெய்னர் லாரியை அக்கும்பல் கடத்திச் சென்றது. சாலையில் இதைக் கவனித்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தனிப்படை அமைத்து லாரியை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
 
அப்போது நுஹ் மாவட்டத்தில் நாய் நகரில் வசிக்கும் ரஸாக் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை பெட்ரோல் பம்ப் அருகே கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரி சென்றுக் கொண்டிருந்த தடம் கண்டறியப்பட்டது.
 
இதையடுத்து கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் கொள்ளைக் கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 5 கார்களையும் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கொள்ளைக் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com