கல்லூரி மாணவர் ஹால் டிக்கெட்டில் பிள்ளையார் புகைப்படம்
பிகாரீல், ஜக்தேஷ் நந்தன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு, பிள்ளையார் படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் உள்ள, லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்குகிறது ஜக்தேஷ் நந்தன் கல்லூரி. இங்கு இளங்கலை பொருளியல் வகுப்பில் கிருஷ்ண குமார் ராய் என்ற மாணவர் படித்து வருகிறார். இப்போது கல்லூரியில் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையாரின் புகைப்படம் மாற்றி பதியப்பட்டு வழங்கப்பட்டது. இதை கவனித்த மாணவர் உடனடியாக பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்தார்.
பின்பு அந்த அனுமதி அட்டையின் புகைப்படத்தில் மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக ஆதார் அட்டைகள், ஸ்மார்ட் கார்டுகள் போன்றவற்றில் புகைப்படங்களை மாறி அச்சிடப்பட்டு வந்த நிலையினில் தற்போது கல்லூரி வரை இந்த பிரச்னை தொடர்ந்துள்ளது.