கர்நாடகாவில் முழு ஊரடங்கு: தமிழக பேருந்துகள் மட்டும் இயக்கம்

கர்நாடகாவில் முழு ஊரடங்கு: தமிழக பேருந்துகள் மட்டும் இயக்கம்

கர்நாடகாவில் முழு ஊரடங்கு: தமிழக பேருந்துகள் மட்டும் இயக்கம்
Published on

கர்நாடகாவில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழகம் - கர்நாடகம் இடையே தமிழக அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்திலிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கர்நாடகத்தில் சனி, ஞாயிறு ஊரடங்கு என்பதால் அங்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசு பேருந்துகள் மைசூருக்கு இயக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என இரு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com