\
கர்நாடகாவில் வார இறுதி முழு ஊரடங்கு வாபஸ்

கர்நாடகாவில் வார இறுதி முழு ஊரடங்கு வாபஸ்

கர்நாடகாவில் வார இறுதி முழு ஊரடங்கு வாபஸ்
Published on: 

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் அமலில் இருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டும் என வல்லுநர்கள் எச்சரித்திருந்ததால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தினசரி தொற்று பாதிப்பு சராசரியாக 40 ஆயிரம் என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது. எனவே, வார இறுதி முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் கொரோனா தடுப்புக்கான விதிமுறைகள் அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com