பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு ஐபிஎஸ் ஆன இமா அஃப்ரோஸ்

பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு ஐபிஎஸ் ஆன இமா அஃப்ரோஸ்
பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு ஐபிஎஸ் ஆன இமா அஃப்ரோஸ்

கிராமத்தில் ஒரு எளிய விவசாயின் மகளாக பிறந்து, 14 வயதில் தந்தையை இழந்து, தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் இன்று நாட்டின் மிகப் பெரிய பொறுப்புகளில் ஒன்றான ஐபிஎஸ் பதவிக்கு சென்றிருக்கிறார் இமா அஃப்ரோஸ்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள குண்டர்கி பகுதியை சேர்ந்த எளிய விவசாயின் மகள் இமா அஃப்ரோஸ். தனது 26-வது வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது அதற்கான பயிற்சியில் உள்ளார். இந்தப் பொறுப்பை அடைய, அவர் சந்தித்த சவால்கள் அதிகமானது.

புற்றுநோய் காரணமாக தனது 14-வது வயதில் தந்தையை இழந்துள்ளார் இமா அஃப்ரோஸ். அதன்பின் இமா அஃப்ரோஸ்க்கு அம்மா, தம்பியே உலகமானது. சாதாரண அம்மாக்களை போல, குழந்தையை நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல், இமா அஃப்ரோஸை மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக வளர்த்துள்ளார் அவரது தாயார்.

பள்ளியில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற இமா அஃப்ரோஸ், அதன்பின் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஸ்டீபன் கல்லூரியில் தத்துவ படிப்பில் இளங்கலை பட்டம் முடித்தார். அந்தக் காலகட்டங்கள் தன் வாழ்வில் மிகுந்த சிறப்பான நாட்கள் என மெய்சிலிர்க்கும் இமா அஃப்ரோஸ், பேராசிரியர்களின் உதவியால் கல்லூரி படிப்பை தவிர வெளி உலகையும் தன்னால்  புரிந்துகொள்ள முடிந்ததாகவும், பல விஷயங்களுக்கு அது உதவியதாகவும் கூறியுள்ளார். வழக்கமாக கல்லூரிகளில்    மாணவர்களுக்குள்ளே விவாதத்தை எழுப்பி, அதன்மூலம் கூட பல விஷயங்களை அறிந்துள்ளார் இமா அஃப்ரோஸ்.

பின்னர் வோல்ஃப்சன் கல்லூரியில் முதுகலை படிக்கும்போது, தனது திறமையால் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதத்தில் பங்கேற்க தேர்வானார் இமா அஃப்ரோஸ். அங்கு தனது பேச்சால் பலரையும் ஈர்த்தார். பின்னார் ஆக்ஸ்போர்டு பல்கழைக்கத்திலும் கல்வி பயின்றார்.

இந்தியா திரும்பிய பின்னர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவிற்காக யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 217 இடத்தை பெற்று ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானார். தற்போது அதற்கான பயிற்சியில் உள்ளா இமா அஃப்ரோஸ். கடின உழைப்பையும், அது தரும் வெற்றியையும் தன் தாயிடம் இருந்து கற்றுக்கொண்டதாக இமா அஃப்ரோஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com