ட்ரம்ப்-ன் நன்றி முதல் கொரோனாவிலிருந்து மீளும் மக்கள் வரை - இன்றைய முக்கிய செய்திகள்

ட்ரம்ப்-ன் நன்றி முதல் கொரோனாவிலிருந்து மீளும் மக்கள் வரை - இன்றைய முக்கிய செய்திகள்

ட்ரம்ப்-ன் நன்றி முதல் கொரோனாவிலிருந்து மீளும் மக்கள் வரை - இன்றைய முக்கிய செய்திகள்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நன்றி முதல் கொரோனாவில் இருந்து மீளும் மக்கள் வரை இன்னும் சில முக்கிய செய்திகள்

 1. ஊடரங்கை நீட்டிக்குமாறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக பிரதமர் மோடி தகவல்.

2. கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்தை வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி. மனிதநேயத்துடன் நடந்துகொண்ட வலிமையான தலைவர் இந்தியப் பிரதமர் மோடி என பாராட்டு.

3. தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 738-ஆக அதிகரிப்பு.

4. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கு நோய்த்தொற்று. தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.

5. சென்னையில் 70 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து குணமடைந்தார். பழக்கூடை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்த மருத்துவக்குழு.

6. கொரோனா பரிசோதனையை தனியார் மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. அரசாணையை வெளியிடவும் மத்திய அரசுக்கு ஆணை.

7. வருமான வரியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க உத்தரவு.

8. சீனாவின் அரசியல் கைப்பாவையாக செயல்படுகிறது என டொனால்டு ட்ரம்ப் விமர்சித்த விவகாரம். பழி சுமத்தும் விளையாட்டு விளையாடும் நேரம் இதுவல்ல என உலக சுகாதார அமைப்பு பதில்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com