மீன் விற்றுக்கொண்டு பி.எச்.டி படித்த இளைஞர் - வறுமையிலும் வெற்றி

மீன் விற்றுக்கொண்டு பி.எச்.டி படித்த இளைஞர் - வறுமையிலும் வெற்றி

மீன் விற்றுக்கொண்டு பி.எச்.டி படித்த இளைஞர் - வறுமையிலும் வெற்றி
Published on

கேரளாவில் கடும் வறுமையிலும் மீன் விற்றுக்கொண்டு ஒரு இளைஞர் பி.எச்.டி படித்திருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள முவத்துபுழா வட்டத்தைச் சேர்ந்தவர் அஜித். 30 வயது இளைஞரான இவர் வறுமையிலும் போராடி பி.எச்.டி படித்துள்ளார். சினிமாக்களில் வருவது போல இவரது வாழ்க்கையும் சிறுவயது முதலே போராட்டமாக இருந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து வாழ்க்கையின் பாதை எட்டிப்பிடித்துள்ளார் அஜித்.

அஜித் பிறந்து மூன்று மாதங்கள் இருக்கும் போது, அவரது தாயை தந்தை விவாகரத்து செய்விட்டார். அதன்பின்னர் தன் மகனுக்காவே தனது வாழ்வை அர்பணித்துவிட்டார் அந்த தியாகத் தாய். அவரது உறவினர்கள் மறுமணம் செய்துகொள்ளச் சொன்னாலும் மகனுக்காக அதை மறுத்துவிட்டார். கடுமையான வறுமையில் பள்ளி பயின்ற அஜித் வீட்டில் மின்சார வசதியோ, தண்ணீர் வசதியோ இல்லை. குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக 8வது படிக்கும்போது மரம் ஏறும் வேலைக்கு சென்றார் அஜித். அவரது அம்மா அண்ணாச்சி பழம் தோட்டத்தில் வேலைக்கு சென்றுள்ளார். 

இதையடுத்து 10வது படிக்கும்போது கல்குவாரிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை செய்யும் போதே மாலை நேரத்தில் பள்ளிக்கு அருகே மீன் விற்கும் தொழில் செய்துள்ளார். இதனால் பள்ளிக்கு செல்வதற்கு சங்கடப்பட்ட அவர் தனது படிப்பை நிறுத்திவிட்டார். அதன்பின்னர் தனது ஆசிரியர்கள் அளித்த தன்னம்பிக்கையால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதிய அஜித், அதில் தேர்ச்சி பெற்றார். அவரது படிப்பு திறமையை பார்த்த அவரது ஆசிரியை ஜோபி, அஜித்தை டிகிரி படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்த அந்த தன்னபிக்கை இன்று அஜித்தை பி.எச்.டி வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதற்கிடையே கல்லூரிகளில் படிக்கும்போது அஜித் ஆட்டோ ஓட்டிக்கொண்டே படித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com