ஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..!
ஓட்டுநர் உரிமமோ, அல்லது திருமண சான்றிதழோ எதுவாகினும் இனி நீங்கள் தேடி சென்று வாங்க வேண்டியதில்லை. உங்களின் வீடு தேடியே வரும். ஆனால் இது தமிழகத்தில் அல்ல. நாட்டின் தலைநகரான டெல்லியில்.
சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கான சேவைகள் இனி வீடு தேடி வரும் என ட்வீட் செய்திருந்தார். அதில், “ ஆட்சியில் ஒரு புரட்சி. ஊழலுக்கு ஒரு பெரிய அடி. மக்களுக்கான ஒரு சூப்பர் வசதி. உலகத்தில் எந்தவொரு இடத்திலும் இல்லாத சேவை” என குறிப்பிட்டிருந்தார்.
Read Also ->அடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா
அதன்படி ஓட்டுநர் உரிமமோ, திருமண சான்றிதழோ எதனையும் பெற அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் கால் கடுக்க காத்து நிற்க தேவையில்லை. எதுவாகியினும் உங்களின் வீடு தேடியே வரும். இந்த திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக ரேஷன் கார்டு, திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்பட 40 வகையான சான்றிதழ்கள் வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கப்பட உள்ளன.
உதாரணத்திற்கு ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால் அவர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட கால் சென்டருக்கு போன் செய்ய வேண்டும். அதன்படி அங்கிருந்து உங்களின் இல்லத்திற்கே வந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் தேவையான விவரங்களை சேகரித்துச் செல்வார்கள். இதன்பின் மீண்டும் வீடு தேடியே ஓட்டுநர் உரிமம் உங்களுக்கு வந்துவிடுவம். ஆனால் வாகனம் ஓட்டும் சோதனைக்காக மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மோட்டார் லைசென்ஸ் அலுவலகத்திற்கு ஒருமுறை செல்ல வேண்டும். டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு வழக்கமான கட்டணத்தை விடு கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.