மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றி கன்னட மொழியில் உருவாகியுள்ள புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது
’அம்மா ஆதா அம்மு: ஜெயலலிதா (அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா)’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புத்தகத்தை கன்னட பத்திரிகையாளர் என்.கே.மோகன்ராம் எழுதியுள்ளார்.
இதில் ஜெயலலிதான் குடும்ப பின்னணி, அவர் திரையுலகில் நுழைந்தது, அரசியல் வாழ்க்கை, மரணம் என முழுமையாக எழுதப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பூர்விகம் மற்றும் பெற்றோர் குறித்து வெளிவராத பல தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம்பெறுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புத்தகம் நேற்று கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட உள்ளதாக மோகன் ராம் கூறியுள்ளார்.