அடிக்கடி வயிற்றுவலி: இளைஞரை ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி
அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறது என்று மருத்துவமனை சென்ற இளைஞரை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் ஸ்குருட்ரைவர், தையல் ஊசிகள், நகங்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோவில் உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் கரண் என்ற 18 வயது இளைஞருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அவரது பெற்றோர். இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான், அவரது வயிற்றில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் நேற்று இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து கூர்மையான ஸ்குருட்ரைவர்கள், 30 நகங்கள், கரடு முரடான கருவிகள், நான்கு தையல் ஊசிகள் போன்றவற்றை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து இளைஞர் கரணின் தந்தை பேசும்போது, ‘கரண் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான். ஆனால், இத்தனைப் பொருட்களை எப்போது? எப்படி விழுங்கினான் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்கிறார்.
அவரைத்தொடர்ந்து பேசிய மருத்துவர்கள், “இளைஞருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அவரிடம் இத்தனை பொருட்கள் எப்படி வயிற்றின் உள்ளே போனது? என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து ஏழு நாட்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கவேண்டும். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்