ஜம்மு காஷ்மீரில் அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற அடிப்படையில் இலவச திறந்தவெளி பள்ளியை ராணுவம் தொடங்கியுள்ளது. ’ஆபரேஷன் சாத்பவனா’ (Operation Sadbhavana) என்ற திட்டத்தின் கீழ் கந்தர்பால் மாவட்டம் சோனமார்க் பகுதியில் தொடங்கியுள்ள இந்த பள்ளியில் இலவச புத்தகங்கள், மதிய உணவு மற்றும் இதர வசதிகள் ஆகியவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகள் நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பள்ளிக்குச் சென்றதேயில்லை. இதன் காரணமாகவே ராணுவம் இவர்களுக்கும் கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது என்று பள்ளி தலைமை ஆசிரியர் அல்டஃப் அகமது கூறியுள்ளார்.
கடந்த வருடம் ‘ஸ்கூல் சலோ’ (School Chalo) என்ற திட்டத்தின் மூலம் ராணுவத்தினர் நிறைய தொலைதூர பகுதிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு இலவச கல்வி பயிற்சிகள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.