கேரளாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்web
இந்தியா
கேரளாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. ஜூன் 15 முதல் ‘பிரியதர்ஷினி' திட்டம் அமல்!
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமலுக்கு வர உள்ளது.
Summary
கேரளாவில் ஜூன் 15 முதல் அமலாகும் ‘பிரியதர்ஷினி’ திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் சாதாரண நகர், புறநகர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
கேரளாவில் வரும் ஜூன் 15 முதல் சாதாரண நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 6 மாத காலத்திற்கு அமல்படுத்தப்படும் இந்த பிரியதர்ஷினி திட்டத்தினால், போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசின் இந்த நலத்திட்டம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார இயக்கத்தை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

