\
ஒரே இடத்தை 23 பேரிடம் விற்ற மோசடி பேர்வழிகள்!

ஒரே இடத்தை 23 பேரிடம் விற்ற மோசடி பேர்வழிகள்!

ஒரே இடத்தை 23 பேரிடம் விற்ற மோசடி பேர்வழிகள்!
Published on: 

ஒரே இடத்தை 23 பேரிடம் விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை பொவாயைச் சேர்ந்தவர் ராஜேஷ் மானே. அந்தப் பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தை தொடங்கினார். மராத்தி நாளிதழ் ஒன்றில் பண்ணை வீடு ஒன்று விற்பனைக்கு வருவதாக விளம்பரம் கொடுத்தார். அதை நம்பி பலர் அவரைத் தொடர்பு கொண்டனர். இதையடுத்து மானே, அந்த ஒரே பண்ணை வீட்டை 23 பேருக்கு சுமார் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் வரை விற்றுள்ளார். இதுதொடர்பாக மானே-வை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி மீண்டும் அதே பண்ணை வீட்டை பலருக்கு விற்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com