ரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்

ரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்

ரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்
Published on

ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த தருணத்தில், அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நிறுவனம் ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் லி மாண்டே செய்திதாளில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

2007 முதல் 2010 வரையில் ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ்’ நிறுவனத்திற்கு 469.7 கோடி ரூபாய் வரிபாக்கி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். 59.49 கோடி ரூபாய் மட்டும் செலுத்துவதாக ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், 2010 முதல் 2012 வரை வரிபாக்கி 712.41 கோடி வரிபாக்கி விதிக்கப்பட்டது. இந்த வரிபாக்கி தொகைகள் தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2015ம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி 36 ரஃபேல் விமானங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில், மொத்தம், 1,182.14 கோடி ரூபாய் வரி பாக்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இருந்தது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஃபேல் விமான கொள்முதல் அறிவிப்புக்கு பிறகு அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 1,182.14 கோடி வரிபாக்கியில், 54.80 கோடி ரூபாய் வரியை மட்டும் கட்டினால் போதும் என்று சலுகை அளிக்கப்பட்டது. ரஃபேல் அறிவிப்பு வெளியான 6 மாதத்தில் இந்த சலுகை அளிக்கப்பட்டது. 

இந்த செய்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், தங்களுக்கு வரிச்சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கும் தங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட ஒப்பந்தம் முழுக்க முழுக்க சட்டரீதியானது என்றும் அந்த நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா - பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே 61,612 கோடியில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து விமான உதிரி பாகங்களை தயாரிப்பது தொடர்பாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தமிட்டது.

கடனில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மிகப்பெரிய ஊழல் இதில் நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அனுபவமிக்க மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com