\
காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் சோபியான் நகரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீகம் பகுதியில் உள்ள தரம்தோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினரை நோக்கி, பதுங்கியிருந்த பயங்கரவாதிக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com