டெல்லி: கட்டடம் இடிந்த விபத்தில் 4 பேர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க மும்மரம்

டெல்லி: கட்டடம் இடிந்த விபத்தில் 4 பேர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க மும்மரம்

டெல்லி: கட்டடம் இடிந்த விபத்தில் 4 பேர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க மும்மரம்
Published on

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளார்; கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரம்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட் பகுதியில் இன்று காலை எதிர்பாராத விதமாக பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் டெல்லி காவலர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு கட்டிட இடுபாடுகளில் சிக்கித்தவித்த நான்கு பேரை அடுத்தடுத்து மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடிய ஒருவரை மீட்கும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் இடுபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com