4 மாநில தேர்தல் முடிவுகள்; வெற்றிக்கொடி நாட்டிய பாஜக.. I-N-D-I-A கூட்டணியின் நெருக்கடிகள் என்ன?

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவுகளுக்குப் பிறகு I-N-D-I-A கூட்டணியின் நெருக்கடிகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவுகளில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி உள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். டிசம்பர் 6ஆம் நாள் நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வகுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், I-N-D-I-A கூட்டணியின் நெருக்கடிகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com