\
விஜயவாடா ஹோட்டலில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

விஜயவாடா ஹோட்டலில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

விஜயவாடா ஹோட்டலில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு
Published on: 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

மற்ற நோயாளிகளை மீட்கும் பணியில் உள்ளூர் மக்களும் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டுவருகின்றனர். தீ விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com