உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

அலகாபாத் மாவட்டத்தில் நைனி ரயில் சந்திப்பில் புவனேஷ்வர் - ராஜ்தானி எக்ஸ்பிரஸில் மோதி ஒரு சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவம் விடியற்காலை 3.30 மணியளவில் நடந்ததாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சுசிலா தேவி, அவரது 15 வயது மகள் ஷீலு லதா, சுசிலாவின் அண்ணி பிரிஜ்கலி மற்றும் விஜய்குமார் என தகவல் வெளியாகியுள்ளது.

கிராமவாசிகள் ரயில்வே தண்டவாளங்களை கடந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது இந்த விபத்து நடைப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ரயில் மோதி ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com