உ.பி., உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மறைவு

உ.பி., உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மறைவு
உ.பி., உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மறைவு

உத்திரபிரதேசம், உத்தகாண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திவாரி தனது 93வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.

உத்தரகாண்ட் மாநிலம் பாலுட்டி பகுதியில், 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறந்த என்.டி.திவாரி அதேநாளில் இன்று இறந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், முதன் முதலாக கஷிபூரில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்த அவர், 1976 ஆம் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் ஆனார். குறுகிய காலமே என்.டி.திவாரி முதல்வராக இருந்தார். அதேபோல், 1984 மற்றும் 1988 ஆண்டுகளிலும் குறுகிய காலம் உத்தரபிரதேச முதல்வராக பதவி வகித்தார். 1986 அக்டோபர் முதல் 1987 ஜூலை வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். நிதியமைச்சராகவும் ஓராண்டு காலம் பொறுப்பில் இருந்தார். 

பின்னர், 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக பதவிவகித்தார். இறுதியாக ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநராக 2007 ஆகஸ்ட் மாதம் முதல் 2009 டிசம்பர் வரை பதவி வகித்தார். உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலையொட்டி என்.டி.திவாரி மற்றும் அவரது மகன் ரோகித் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.  

உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் என்.டி.திவாரி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com