மூத்த தலைவர் சரத் யாதவ் மறைவு: நினைவுகளை பகிர்ந்த மோடி,  ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின்!

மூத்த தலைவர் சரத் யாதவ் மறைவு: நினைவுகளை பகிர்ந்த மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின்!

மூத்த தலைவர் சரத் யாதவ் மறைவு: நினைவுகளை பகிர்ந்த மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின்!
Published on

மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்றிரவு (ஜன.12) காலமானார். அவருக்கு வயது 75.

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவின் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரத் யாதவ் நேற்று இரவு 10.19 மணிக்கு காலமானார்.  

தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் 7 முறை எம்.பியாக இருந்துள்ளார் சரத் யாதவ். 1990களின் பிற்பகுதியில் அப்போதைய பிரதமா்கள் வாஜ்பாய், வி.பி.சிங் ஆகியோரின்  தலைமையிலான மத்திய அரசில் பல்வேறு துறைகளின் அமைச்சராக சரத் யாதவ் பதவி வகித்தாா். பீகார் அரசியலில் நிதிஷ் குமார், லாலு பிரசாத்துக்கு அடுத்த தலைவராக சரத் யாதவ் அறியப்பட்டார்.

பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் சரத் யாதவ். கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சரத் யாதவ் பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார். பாஜகவை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக  தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார்.

சரத் யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், “சரத் யாதவ்வின் மறைவை கேட்டு துயருற்றேன். அவருடைய நீண்ட பொதுவாழ்வில், எம்.பி யாகவும் அமைச்சராகவும் தனித்து விளங்கினார் அவர். அவருடனான என் உரையாடல்களை எப்போதும் கொண்டாடுவேன். அவர் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சரத் யாதவ் ஜி சோசலிசத்தின் தலைவராக இருப்பதுடன் அடக்கமான இயல்புடையவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று கூறியுள்ளார்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற இலட்சியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com