மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!
Published on

மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி, ஐதராபாத்தில் வசித்து வந்தார்.  கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவருக்கு மனைவியும் இரட்டையர்களான மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மறைந்த ரெட்டியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.  அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 1942 ஆம் ஆண்டு பிறந்த ரெட்டி, ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்தார். அதன்பின் அரசியலில் இறங்கிய அவர், 1970ம் ஆண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வானார். 

5 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஜெய்பால் ரெட்டி இருந்துள்ளார். ஐகே குஜரால் மற்றும் மன்மோகன் சிங் அரசுகளில் அமைச்சராக இருந்துள்ள அவர், தகவல் ஒலிபரப்பு, நகர்ப்புற வளர்ச்சி, பெட்ரோ லியம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்தார்.

4 முறை ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com