காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அவர் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரி அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா கடந்த 2001இல் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் பொதுச் செய்யலாளராக தனது அரசியல் பணியை தொடங்கியவர். 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பணியாற்றியவர். 

கடந்த 2014இல் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். மேற்கு வங்க காங்கிரஸ் பிரதேச கமிட்டியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர் பாஜகவில்  இணைந்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com