கொரோனா பாதிப்பு: சிகிச்சைப் பலனின்றி முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: சிகிச்சைப் பலனின்றி முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: சிகிச்சைப் பலனின்றி முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி உயிரிழப்பு
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் திலீப் காந்தி(69). இவர் 1999 ஆம் ஆண்டு அகமத்நகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2003- 2004ஆம் ஆண்டு வரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கப்பல்துறை அமைச்சராக பணியாற்றினார்.

தொடர்ந்து 2009, 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற்றார். ஆனால், 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com