பிரபல ரேடியோ ஜாக்கி மர்ம கொலை

பிரபல ரேடியோ ஜாக்கி மர்ம கொலை
பிரபல ரேடியோ ஜாக்கி மர்ம கொலை

கேரளாவின் பிரபல ரேடியோ ஜாக்கி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரசிகன் ராஜேஷை தெரியாதவர்கள் கேரளாவில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ரேடியோ ஜாக்கி. இவருக்கு வயது 36. இவரது நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ராஜேஷ் நாட்டுப்புற பாடல்களை பாடுவதிலும் திறமைசாலி. இவரை இன்று ஒரு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது. அதிகாலை 2 மணி அளவில் இந்தக் கொலை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. நேற்று இரவு ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய ராஜேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள மாதவூர் தனது ஸ்டியோவில் தன் நண்பர் குட்டனுடன் தங்கியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை வந்து தாக்கியுள்ளது. அந்தத் தாக்குதலில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த நண்பன் குட்டனையும் அந்தக் கும்பல் தாங்கியுள்ளது. அதில் அவர் மோசமான நிலைக்கு சென்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர் இந்தக் கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரபலமான ஒரு ரேடியோ ஜாக்கி கொலை செய்யப்பட்டுள்ளது கேரள மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com