former prime minister manmohan singh was admitted to aiims delhi
மன்மோகன் சிங்எக்ஸ் தளம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்து இருந்தது.
Published on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்து இருந்தது. தற்போது அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

former prime minister manmohan singh was admitted to aiims delhi
மன்மோகன் சிங்எக்ஸ் தளம்

2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங். இந்த ஆண்டு அவர் ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். தற்போது 92 வயதாகும் அவர் கடந்த சில மாதங்களாக வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வபோது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்தான், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே, மன்மோகன் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால், அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

former prime minister manmohan singh was admitted to aiims delhi
“இதுவரை எந்தப் பிரதமரும் இப்படி பேசியதில்லை” - மோடியை சாடிய மன்மோகன் சிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com